டெல்லியில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து புத்தாண்டு வாழ்த்து பரிமாறி கொண்ட விவசாயிகள்!

0 2892

டெல்லியில் இன்று 37வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாடினர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அவர்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வரும் 4 ம் தேதி அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கும் விவசாயிகள் புத்தாண்டிலும் வீடுகளுக்குச் செல்லாமல் கடும் குளிரிலும் பனியிலும் சாலையிலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments