திருப்பதியில் லிப்ட் விபத்தில் இஸ்ரோ பெண் அதிகாரி உயிரிழப்பு

0 18740

திருப்பதியில் லிப்டில் தவறி விழுந்து, இஸ்ரோவின் மூத்த பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றிய வசந்தி, திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் 3- வது மாடியில் இருந்து லிப்டில் கீழே இறங்க காத்திருந்த போது லிப்ட் மேலே வருவதற்குள் தானாக கதவு மட்டும் திறந்து கொண்டது.

வசந்தி லிப்ட் வந்ததாக நினைத்து காலடி எடுத்து வைத்த நிலையில் கீழே விழுந்தார். இதில் லிப்ட்டிற்கு  மேற்புறத்தில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த வசந்தி உயிரிழந்தார். 

நீண்ட பல காலமாக லிப்ட் பழுதாகி இருந்ததாகவும், பல முறை புகார் தெரிவித்தும் உரிமையாளர் சரி செய்யவில்லை என்றும் அங்கு வசிப்போர் புகார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments