2020ஆம் ஆண்டு இறுதிநாளில் சூரியன் மறைந்த அழகுநிறை காட்சிகள்

2020ஆம் ஆண்டின் இறுதிநாளில், ஆதவன் மறையும் நிகழ்வுகள், பல்வேறு இடங்களில் படம்பிடிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், ஆண்டு இறுதியின் சூரியன் மறைவை, மழைக்கால மேகங்கள் மறைத்துவிட்டன.
மும்பையில் மாஹிம் கடற்கரையில், ஆதவன், ஆழ்கடல் மறைவில், தன்னை மறைத்துக்கொள்ளும் அழகுநிறை காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
டெல்லி நிஜாமுதீன், அசாமின் கவுகாத்தி, பிரம்மபுத்திரா ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு, 2020ஆம் ஆண்டு இறுதி நாளில், சூரியன் மறையும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
Comments