அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி - முதலமைச்சர்

0 2555
அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணிகளின் நிலை தெளிவாகும் என்றும், மக்களவை தேர்தலின் போது உடனிருந்த கட்சிகளுடன் கூட்டணி தொடர்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து ராஜகோபுரம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். திருச்சி மாவட்டத்திற்கும், ஸ்ரீரங்கம் தொகுதியிலும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் கட்சியாகவே திமுக செயல்படுகிறது என்று அவர் விமர்சித்தார். முக்கொம்பு கதவணை கட்டும் பணி   இன்னும் மூன்று அல்லது  நான்கு மாதங்களில்  நிறைவடையும் என்றும் பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணிகளின் நிலை தெளிவாகும் என்றார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments