குவைத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா நடவடிக்கை

0 1768

குவைத்துக்கு 29 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “குவைத் அரசு 8 அப்பாச்சி ஏ.எச்.64இ ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும், 16 அப்பாச்சி ஏ.எச்.64டி ரக ஹெலிகாப்டர்களை மறு உற்பத்தி செய்யவும் கோரியதாக கூறப்பட்டுள்ளது.

இதுதவிர பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்க விரும்பியதாகவும், சுமார் 29,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சவுதி அரேபியாவுக்கு சுமார் 2,123 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 வெடிகுண்டுகளை விற்கவும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments