சபரிமலை கோவில் ஊழியர்கள் 37 பேருக்கு கொரோனா தொற்று

0 1246

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு சன்னிதானத்தில் பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என 37 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடன் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3பேர் அர்ச்சகர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments