சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகளை அறிவித்தார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

0 10212

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 4 ஆம் தேதி முதல்  ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

நேரலையில் பேசிய அவர், செய்முறை பயிற்சி தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என்றார். தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என்று ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

வழக்கமாக பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வு, இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக தாமதமாக மே மாதம் நடைபெற உள்ளது.

ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments