தமிழகத்தில் ஜனவரி 10 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஜனவரி 10 ஆம் தேதி வரை மழை தொடருமென சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வடகிழக்கு திசை காற்று தொடர்ந்து வீசுவதால் மழை நீடிக்கும் என்றார். இந்த ஆண்டில் தமிழகத்தில் 984 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறிய அவர், இந்த காலகட்டத்தின் சராசரி மழை அளவு 946 மி.மீ என்றார்.
இயல்பை விட 4 % அதிக மழை பெய்துள்ளதாக கூறிய அவர், தென்மேற்கு பருவமழை காலத்தில் 24 % அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது என்றார். வடக்கிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 6 சதவிகிதம் அளவுக்கு அதிக மழை பெய்துள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments