பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து இந்துக்கள் ஆர்ப்பாட்டம்

0 2646

பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஏராளமான இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமேற்குப்பாகிஸ்தானில் கரக் நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலை புதன்கிழமை ஒரு கும்பல் இடித்து தீ வைத்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து கராச்சியில் உச்சநீதிமன்றத்திற்கு வெளியே இந்துக்கள் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று முழக்கமிட்ட அவர்கள், கோவிலை இடித்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments