18 தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு: தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிப்பா? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

0 1302

மீபத்தில் நிரப்பப்பட்ட 18 தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானது என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், கல்வி தகுதி, இட ஒதுக்கீடு, போட்டி தேர்வு மதிப்பெண், அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இறுதி தேர்வு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 18 மாணவர்களும் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவர் என்றும், ஆகையால், தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments