தமிழகத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு

0 9930

பொது ஊரடங்கு உத்தரவு, மேலும் தளர்வுகளுடன், ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை  நீட்டிக்கப்பட்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு நீக்கப்படுகிறது.  நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் தவிர, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடரும்.

காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை  என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments