சீனாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு

சீனாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு
சீனாவில் குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த சீன அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் துணை தலைவர் ஜெங் சின், அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசியை பயன்படுத்தியதில், பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த 15 நாட்களில் மொத்தம் 30 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி போடப்படும் என்றும், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments