பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு சாதாரண கொரோனா தான் - சுகாதாரத்துறை செயலர்

0 862

பிரிட்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு சாதாரண கொரோனா தான், உருமாறிய கொரோனா இல்லை என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லண்டனில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் பெரும்பாலானோர் போலியான முகவரியைத் தந்துள்ளதால், பலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இன்னும் 487 பேரை அடையாளம் காணவேண்டியிருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கொரோனாவுக்கும், பிரிட்டன் உருமாற்றக் கொரோனாவுக்கும் பாதிப்பு அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments