பிரபல நடிகர் நடிகைகள் பெயரில் கொரானா டெஸ்ட் எடுத்ததாக பொய்க் கணக்கு: ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார்

0 8993

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, கொரோனா மாதிரிகள் எடுத்ததாக ரஜினி, கமல், அஜித், விஜய், சில்க் பெயர்களில் பொய்க் கணக்கு காட்டியதாக ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார் எழுந்துள்ளது.

கடந்த 6ஆம் தேதி கொரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டவர்கள் பட்டியலை சிங்காரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளது.

அதில் வரிசையாக திரைத்துரை பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தினசரி பரிசோதனை இலக்கை எட்டிவிட்டதாக காட்டுவதற்காக இப்படி பொய்யான பெயர்களை சேர்த்து, டெஸ்ட் கிட்களை வீணடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments