அடுத்த 24 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3297
அடுத்த 24 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கன மழையும், தென் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு செல்லும் மீனவர்கள், இன்றும், நாளையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments