சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக ஒரு லட்சம் பக்தர்களுக்கு அனுமதி

0 866
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக ஒரு லட்சம் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காலத்தில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த கோவிலில் இன்று முதல் மகர விளக்கு பூஜைக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 5000 பேர் வீதம் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி மகரவிளக்கு பூஜை சீசனில் மொத்தம் 1லட்சம் பேர் சாமி தரிசனம் செய்ய முடியும். ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments