ஸ்ரீநகரில் நேற்று 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்... போலி என்கவுன்ட்டர் என 3 பேரின் குடும்பத்தினரும் குற்றச்சாட்டு

0 769
ஸ்ரீநகரில் நேற்று 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்... போலி என்கவுன்ட்டர் என 3 பேரின் குடும்பத்தினரும் குற்றச்சாட்டு

காஷ்மீரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் அப்பாவி இளைஞர்கள் என்றும், போலி என்கவுன்ட்டரில் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தலைமைக் காவலர் ஒருவரின் மகன் உள்ளிட்ட 3 இளைஞர்கள் நேற்று ஸ்ரீநகரின் புறநகர்ப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 3 பேரும் தீவிரவாதிகள் பட்டியலில் இல்லை என்றாலும், தீவிரவாதிகளுக்காக வேலை செய்தவர்கள் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த மூன்றுபேரில் ஒருவர் 11ஆம் வகுப்பு மாணவர் என்றும், இரண்டு பேர் ஸ்ரீநகரில் படிப்பிற்காக வந்தவர்கள் என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ஷோப்பியானில் கூலித் தொழிலாளிகள் 3 பேரை தீவிரவாதிகள் எனக் கூறி சுட்டுக் கொன்றதாக ராணுவ அதிகாரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில நாட்களில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments