குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

0 839
குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ராஜ்கோட்டில் 1195 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், உலகின் மாபெரும் தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தடுப்பூசி போட்ட பின்னரும் சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடுமையாகப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments