தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன - தேர்தல் ஆணையம்
கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதால் தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்பு குறைவு எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா சூழலால் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் 67ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மகராஷ்டிர, மத்தியப்பிரதேச மாநிலங்களில் இருந்து கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
Comments