புத்தாண்டுக்கு முந்தைய நாளைச் சிறப்பிக்க டூடுல் வெளியிட்ட கூகுள்..!

புத்தாண்டுக்கு முந்தைய நாளைச் சிறப்பிக்க டூடுல் வெளியிட்ட கூகுள்..!
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய நாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்றிரவு 12 மணிக்குப் ஆங்கிலப் புத்தாண்டான 2021 தொடங்குகிறது. அதை நினைவூட்டும் வகையில் கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் வீடு வடிவக் கடிகாரத்தில் 2020 எனக் குறிப்பிட்டுள்ளது.
இரவு பன்னிரண்டு மணியைத் தொடப்போவதைக் காட்டும் வகையில் அதில் கடிகாரத்தின் முட்களும் வரையப்பட்டுள்ளன. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளான டோங்கா, சமோவா, கிரிபாடி ஆகியவற்றில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறக்கும்.
பசிபிக் பெருங்கடலின் நடுவில் உள்ள பேக்கர்ஸ் தீவு, அமெரிக்கன் சமோவா ஆகியவற்றில் கடைசியில் புத்தாண்டு பிறக்கிறது.
Comments