புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தடுக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தடுக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாநகர காவல் ஆணையர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
தடையை மீறி வாகனங்கள் இயக்குபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மாநிலத்தில் புதிய கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்று மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Comments