9 மாதங்களுக்கு பின் உதகை மலை ரயில் இன்று முதல் இயக்கம்..!

9 மாதங்களுக்கு பின் உதகை மலை ரயில் இன்று முதல் இயக்கம்..!
கொரானோ தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது.
இன்று முதல் மலை ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்ததால், மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கி, ரயில் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கும், குன்னூரில் இருந்து உதகைக்கு 7.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Comments