இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்படுமா? - இறுதி முடிவெடுப்பதற்காக நாளை கூடுகிறது நிபுணர்க்குழு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்படுமா? - இறுதி முடிவெடுப்பதற்காக நாளை கூடுகிறது நிபுணர்க்குழு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து இறுதி முடிவெடுக்க, நாளை நிபுணர் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது.
மருந்துத் தரக் கட்டுப்பாட்டு குழுவான SECயிடம் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை தாக்கல் செய்த அறிக்கையில் அவை தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்தை அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கும்படி கோரியுள்ளன.
இதனை பரிசீலிப்பதற்கு மேலும் ஓரிரு நாள் கூடுதலான அவகாசம் கோரிய SEC நாளை இறுதி முடிவெடுக்க கூட உள்ளது.
Comments