புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக வழக்கமான களையிழந்து காணப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வைரசைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவோரைக் குறித்து கவனமாக இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Comments