பிரதமர் மோடி தலைமையில் 34வது பிரகதி உரையாடல் கூட்டம்... ஆயுஷ்மன் பாரத், ஜல் ஜீவன் திட்டங்கள் குறித்து ஆய்வு

0 513
பிரதமர் மோடி தலைமையில் 34வது பிரகதி உரையாடல் கூட்டம்... ஆயுஷ்மன் பாரத், ஜல் ஜீவன் திட்டங்கள் குறித்து ஆய்வு

த்திய அரசால் நிறைவேற்றப்படும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

முப்பத்து நான்காவது பிரகதி உரையாடல் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவற்றைக் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments