பாரதீப் துறைமுகத்தில் புதிய கப்பல் தளம் கட்ட மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல்

பாரதீப் துறைமுகத்தில் புதிய கப்பல் தளம் கட்ட மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல்
ஒடிசா மாநிலம் ஜகத்சிங் புர் பகுதியில் அமைந்துள்ள பாரதீப் துறைமுகத்தில் புதிய கப்பல் தளம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நிலக்கரி, எஃகு போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கு இத்துறைமுகம் முகவாயிலாக விளங்குகிறது. பாரதீப் துறைமுகத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் கட்டுமான வசதிகள் அதிகரிக்கப்பட உள்ளன.
கடல் போக்குவரத்தை அதிகப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் வர்த்தகத்தையும் அது அதிகரிக்கும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments