சபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா

0 1566
சபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா

பரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், மேல்சாந்தி உட்பட 7பேர் தனிமைப்படுத்தி கொண்டனர்.

மகரவிளக்கு பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜின் உதவியாளர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மேல்சாந்தி உட்பட 7 பேர் தங்களை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர். கோயில் நடையைத் திறந்த தந்திரி கண்டரர் ராஜீவரர், இன்று முதல் சிறப்பு பூஜைகளையும் நடத்துவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments