ஜனவரி 31 வரை ஊரடங்கை நீட்டித்தது மகாராஷ்ட்ரா அரசு

ஜனவரி 31 வரை ஊரடங்கை நீட்டித்தது மகாராஷ்ட்ரா அரசு
மகாராஷ்ட்ரா அரசு ஊரடங்கை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பின், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து பரவும் புதிய வகை கொரோனாவால் பொது ஊரடங்கையும் மேலும் ஒருமாதம் நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
முந்தைய நிலையே நீடிக்கும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கியிருந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அமலுக்கு வந்தன.
இதில் மீண்டும் இரவு நேரத்தில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மும்பை போன்ற பெருநகரங்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments