கார் தயாரிப்புக்காக கடன் வாங்கி ரூ.100 கோடி மோசடி... ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர் திலிப் சப்ரியாவை ஜன.2 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

0 1471
கார் தயாரிப்புக்காக கடன் வாங்கி ரூ.100 கோடி மோசடி... ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர் திலிப் சப்ரியாவை ஜன.2 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல ஸ்போர்ட்ஸ் கார் டிசைனர் மற்றும் தயாரிப்பாளர் திலிப் சப்ரியாவை, ஜனவரி 2 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிசி டிசைன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த அவர், அவந்தி என்ற பெயரில் கார்களை விற்பனை செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 127 கார்களை அவரது நிறுவனம் தயாரித்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளது.

ஒரே என்ஜின் மற்றும் சேசிஸ் நம்பருடன் பல கார்களை விற்று வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர் போல் சுமார் 90 கார்களுக்கு தலா 42 லட்சம் ரூபாய் வீதம் கடன் பெற்ற அவர், கடனை செலுத்தாமல் கார்களை மற்ற நபர்களுக்கு விற்று மோசடியை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments