தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜர்

0 1619
தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜர்

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

தமிழக அரசு தரப்பில் 6 அவதூறு வழக்குகள் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்ததால் ஸ்டாலின் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை மு.க.ஸ்டாலினின் வழக்கறிஞரிடம் அளித்தார். வழக்குகளை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதம் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments