இந்திய அணியில் இணைந்தார் ரோகித் ஷர்மா..!

0 5117
இந்திய அணியில் இணைந்தார் ரோகித் ஷர்மா..!

ந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு பின்னர் இந்திய அணியில் இணைந்தார்.

ஐ.பி.எல். போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை.

இதனிடையே பெங்களூருவில் பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்ற ரோகித் ஷர்மா, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் மெல்போர்னில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியினருடன் ரோகித் சர்மா இணைந்த காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments