தமிழ்நாட்டில் 1000-க்கும் கீழ் குறைந்தது, கொரோனா பாதிப்பு..!

தமிழ்நாட்டில் 1000-க்கும் கீழ் குறைந்தது, கொரோனா பாதிப்பு..!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து, வைரஸ் தொற்று பாதிப்பு 2- வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆயிரத்து 60 பேர், பாதிப்பிலிருந்து நலமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 17 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 275 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவானதாக தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, 29 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
Comments