டெல்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது என மத்திய அரசு தகவல்....

டெல்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது என மத்திய அரசு தகவல்....
விவசாயிகளுடன் நடைபெற்ற 6 வது சுற்று பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்வது, மின்சார திருத்த சட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற விவசாயிகளின் இரு கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது என்றார்.
மீதமுள்ள இரு கோரிக்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது குறித்து ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Comments