சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா விழா கோலாகலம்...! ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

0 1107
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா விழா கோலாகலம்...! ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்திற்குப் பின் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தர்கள் காணிக்கை அளித்த தங்க காசுகளை கொண்டு பொற்காசு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் செய்யப்பட்டன.

நடராஜரும், சிவகாம சுந்தரிஅம்மனும் தரிசனம் அளித்த போது பக்தர்கள் சிவசிவா என்று முழக்கமிட்டனர். ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments