காஞ்சிபுரம் : பெற்ற மகனையே கொலை செய்ய முயற்சித்த தாய்!... கள்ளக்காதலன் வாக்குமூலத்தால் பரபரப்பு!

பெண் ஒருவன் தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொல்வதை அவரது கள்ளகாதலனே காட்டி கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள முட்புதரில் சிறுவன் ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்து அப்பகுதியினர் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்த போது அச்சிறுவன், தனது தாய் பெயர் சித்ரா என்றும் அவருடன் தான் செல்ல மாட்டேன் என்றும் கதறி அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், சிறுவனிடம் மேலும் விசாரித்துள்ளனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. சிறுவன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவரது தாய் சித்ராவை கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில்,
2 மகன்களுக்கு அம்மாவான சித்ரா, கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில், காமராஜ் நகரை சேர்ந்த மகேஷ் என்பவரோடு சித்ராவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகேஷிடம் சித்ரா வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகேஷ் சித்ராவின் இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு வந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சித்ராவின் 2வது மகன் கடந்த 2 மாதங்களுக்கு மூன் தீ விபத்தில் உயிரிழந்தார். எனவே தற்போது அதுவும் கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சித்ராவின் கொலைப்பழி தன் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார் மகேஷ். இதனிடையே சித்ரா தனது மூத்த மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த போது யாருக்கும் தெரியாமல் செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் மகேஷ் . இதனால் மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் உயிரிழந்ததாக நினைத்து இருவரும் அவரை முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.
இதையடுத்து மகேஷ் அந்த கொலைமுயற்சி வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். சித்ரா அவருடைய குழந்தையை கொல்ல முயன்றதுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தனது நண்பர்களிடம் மகேஷ் கூறியிருக்கிறார். அந்த வீடியோவை அவருடைய நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சித்ராவை கைது செய்ததோடு, சித்ராவின் காதலர் மகேஷையும் தேடி வருகின்றனர். சித்ராவின் இரண்டாவது மகன் உயிரிழந்து குறித்தும் காவல் துறையினர் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Comments