தொல்லியல் துறை அலுவலர் தேர்வில் பிற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு... தமிழக மாணவ - மாணவிகளை புறக்கணிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்

0 2903

தொல்லியல் துறை அலுவலருக்கான தேர்வில் பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பு அளித்து, தமிழை முதன்மை பாடமாக பயின்றவர்களை புறக்கணிப்பதா ? என தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்வெட்டியல் - தொல்லியல் முதுநிலைப் பட்டயம் பெற்ற மாணவ - மாணவிகள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டி உள்ள அவர்,  அருந்ததியர் சமுதாய மாணவ - மாணவிகளும் புறக்கணிக்கப்பட்டு  உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். தமிழகத்தில் படிப்போருக் குத் தமிழ்நாட்டில் வேலை கொடுக்க மறுப்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments