மத்திய அரசு-விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே ஆறாம் சுற்றுப் பேச்சு... விவசாயிகள் கொண்டு வந்த உணவை உண்ட மத்திய அமைச்சர்கள்

மத்திய அரசு-விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே ஆறாம் சுற்றுப் பேச்சு... விவசாயிகள் கொண்டு வந்த உணவை உண்ட மத்திய அமைச்சர்கள்
டெல்லி விஞ்ஞான் பவனில் பேச்சு நடத்திய மத்திய அமைச்சர்கள் விவசாயிகள் கொண்டுவந்த உணவை உண்டு தோழமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராடும் விவசாயிகள் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மத்திய அமைச்சர்களுடன் பேச்சு நடத்தினர்.
கடந்த பேச்சுவார்த்தைகளின் போது விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசு வழங்கும் உணவை ஏற்க மறுத்துத் தாங்கள் கொண்டு வந்த உணவையே உண்டனர். அதேபோல் இன்றும் ஒரு வேனில் கொண்டுவரப்பட்ட உணவை விவசாயிகள் உண்டனர்.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயலும், நரேந்திர சிங் தோமரும் தோழமையை வெளிப்படுத்தும் வகையில் விவசாயிகளுடன் அமர்ந்து அவர்கள் வழங்கிய உணவை உண்டனர்.
Comments