சீன அரசின் நடவடிக்கையால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது ஜாக் மாவின் அலிபாபா.! 2 மாதங்களில் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு.!

0 2115

சீன அரசின் நடவடிக்கையால், பிரபல தொழிலதிபர் ஜாக் மாவின் அலிபாபா குழுமம், 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை எதிர்கொண்டிருக்கிறது.

ஜாக் மாவின் அலிபாபா குழுமம், போட்டியாளர்களை ஒழித்து ஏகபோகமாக, அதாவது மோனோபோலியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் அலிபாபா நிறுவனத்தின் ஆன்ட் குரூப் ஐபிஓ-வை கடந்த நவம்பரில், சீன அரசு தடை செய்துள்ளது.

சீன அரசின் தடையால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு, அலிபாபாவின் ஆன்ட் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. 2 மாதங்களில் 80 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ள ஜாக் மா, ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் பின்தங்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன், சீன அரசின் பைனான்சியல் ஆய்வு அமைப்பை, முதியவர்களின் கூடாரம் என, ஜாக் மா விமர்சனம் செய்த நாள் முதலே, அலிபாபாவுக்கு நெருக்கடிகள் தொடர்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments