பப்புவா நியு கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

0 831
பப்புவா நியு கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

ப்புவா நியூ கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு நேரிட்டுள்ளது. இதில் அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டி இருக்கும் மீது மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும்.

ஹெலிகாப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments