ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற கருத்தை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்ற விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 10 ஆயிரத்து 954 பயணாளிகளுக்கு, 4 கோடியே 51 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுக, பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தங்கள் கருத்தை ஏற்கனவே கூறியுள்ளோம் என பதில் அளித்தார்.
Comments