நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முதலமைச்சரின் தனிப்பிரிவில் சித்ரா பெற்றோர் மனு

0 3702

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெற்றோர் மனு அளித்துள்ளனர். 

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி,  வரதட்சணை கொடுமை  இல்லை என அறிக்கை தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியது. இருப்பினும் ஹேம்நாத்தின் பெற்றோர் தங்களது மகன் மீது தவறும் இல்லை எனவும்,  வேறு யாரோ ஒரு நபரால் சித்ரா தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்து, அது குறித்து விசாரிக்க வலியுறுத்தியிருந்தனர்.

அதேபோல் சித்ராவின் குடும்பத்தினர் டிஜிபி அலுவலகத்தில்   சிபிசிஐடி விசாரிக்கக்கோரி மனு அளிக்க வந்தனர். ஆனால் அங்கு மனு பெறப்படாததால், முதலமைச்சரின் தனிப்பிரிவில்  நேரில் மனு அளித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments