பெருமளவில் தொற்று பரவக் காரணமான நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 1179
பெருமளவில் தொற்று பரவக் காரணமான நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பெருமளவில் தொற்று பரவக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளைத் தடுக்கக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா பரவி வருவதால், அந்தத் தொற்று இந்தியாவில் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அனுமதித்தால் கொரோனா பெருமளவில் பரவக் காரணமாகி விடும் என அரசு கருதுகிறது. இதனால் பெருமளவில் தொற்று பரவக் காரணமாகும் புத்தாண்டுக் கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தடுக்கக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி மத்திய அரசின் நலவாழ்வு அமைச்சகம் மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments