கொரோனா தடுப்பூசியை பதப்படுத்தி வைப்பதற்கான பணிகள் தீவிரம்..!

0 1757
கொரோனா தடுப்பூசியை பதப்படுத்தி வைப்பதற்கான பணிகள் தீவிரம்..!

மிழகத்தில் கொரோனா தடுப்பூசியை சேமித்து பதப்படுத்தி வைப்பதற்கான பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் மூலம் சென்னை உள்பட 10 இடங்களிலும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசியை பதப்படுத்தி வைப்பதற்கான மையம் தயார் நிலையில் உள்ளது.

16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கூலரில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொரோனா தடுப்பூசி பதப்படுத்தி வைக்கப்படும். ஒவ்வொரு கூலரிலும் தலா 20 லட்சம் டோசேஜ் சேமித்து வைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments