பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

0 725
பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

ட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பதற்குத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அரசின் செய்திக் குறிப்பில், பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழிலாளர்களுக்கென நலவாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டும், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், பட்டாசுத் தொழில், தீப்பெட்டித் தொழில் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலவாரியத்தை அமைக்க அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புச் சாராத் தொழிலாளர்களும் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments