அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறதா ? பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 578

ருமாற்றம் பெற்ற கொரோனா பரவும் சூழலில், இங்கிலாந்து மட்டுமின்றி, அனைத்து வெளிநாடுகளிலிருந்தும் வருவோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறதா? என்பது குறித்து பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக, மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும், இந்த பொதுநல வழக்குத் தொடர்பாக, அறிக்கை தாக்க செய்ய, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை, வருகிற 5ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments