அமெரிக்காவில் கொரோனா பரிசோதனைக்காக நூற்றுக்கணக்கான கார்களில் வரிசையில் காத்திருந்த மக்கள்

0 2169

மெரிக்காவின்  லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கொரோனா பரிசோதனை எடுப்பதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் காத்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டாட்ஜர் மைதானத்தில் இருக்கும் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அங்கு வந்து ஏராளமானோர் நாள்தோறும் கொரோனா பரிசோதனை எடுக்கின்றனர். அதுபோல கொரோனா பரிசோதனை எடுக்க வந்தோர், மைதானத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான கார்களில் அணிவகுத்து காத்திருந்தனர்.

பெரும்பாலும், கார்களில் அமர வைக்கப்பட்டவாறே, கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதற்காக, கார்களில் அணிவகுத்து காத்திருக்கும் நிகழ்வின், டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments