கடலூரில் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு உள்ளான சிறுமி தீக்குளிப்பு..! அத்து மீறியவன் போக்சோவில் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு உள்ளான சிறுமி அவமானம் தாங்காமல் தீக்குளித்தார்.
குறுக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான அந்தச் சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான ரஞ்சித்குமார் என்பவன் காதலிப்பதாக கூறி வந்துள்ளான்.
இந்த நிலையில் நேற்றிரவு தோழி வீட்டுக்குச் சென்று திரும்பிய சிறுமியை வழிமறித்த ரஞ்சித், தன் காதலை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என தகராறு செய்துள்ளான். அதற்கு சிறுமி மறுத்த நிலையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.
அப்போது நடந்த போராட்டத்தில் சிறுமியின் ஆடை கிழிந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவமானமாக கருதிய சிறுமி, வீட்டுக்கு வந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். சிறுமி காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி ரஞ்சித்குமார் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.
Comments