தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் முதலமைச்சர் யார் எனப் பிறகு முடிவு - சி.டி.ரவி

0 5181
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றால் முதலமைச்சர் யார் என்பது குறித்துக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு இறுதி முடிவெடுக்கும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் பாஜகவின் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தமிழகத் தலைவர் முருகன், மேலிடப் பொறுப்பாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதன்பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பாஜக - அதிமுக கூட்டணி தொடர்வதாக முருகன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை எனவும் பேட்டியின்போது ரவி தெளிவுபடுத்தினார்.

மேலிடப் பொறுப்பாளர் ரவி டுவிட்டரில் பக்கத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், முதலமைச்சர் யார் என்பது குறித்துக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு இறுதி முடிவெடுக்கும் என ரவி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments