பொங்கல் பரிசு டோக்கனில் அதிமுக சின்னம், தலைவர்கள் படம் உள்ளதை நீக்கக் கோரி திமுக மனு

பொங்கல் பரிசுக்கான டோக்கன்களில் அதிமுக சின்னம் மற்றும் தலைவர்களின் படங்களை நீக்கக்கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் டோக்கன்களில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களும், அதிமுக சின்னமும் இடம் பெற்றுள்ளதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் வரிப்பணத்தில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் ஆளும் அதிமுகவினர் விளம்பரம் தேடுவது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வில் வழக்கறிஞர் வில்சன் முறையிட்டார். இது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments