மு.க.ஸ்டாலினுக்கு பொய் கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை, பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் - முதலமைச்சர்

0 4237

திருச்சி தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை உடைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவை வெற்றி பெறாது என்றும் கூறினார். அப்படி ஏற்கனவே நடைபெற்ற முயற்சிகள், அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.

தான் கடுமையாக உழைத்து படிப்படியாக முதலமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளேன் என்று கூறிய முதலமைச்சர், கலைஞரின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக திமுக தலைவராக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின் என்றார்.

ஸ்டாலினுக்கு பொய்யை கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை என்று கூறிய முதலமைச்சர், தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் கூறுவதை கேட்டு திமுக செயல்படுவதாகவும் சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments